அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் - அரியானாவில் 144 தடை உத்தரவு

Government Of India
By Thahir Jun 17, 2022 09:39 PM GMT
Report

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பீகார், உத்தர பிரதேசம்,

அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் - அரியானாவில் 144 தடை உத்தரவு | 144 Restraining Orders In Haryana

சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரெயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவு

ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அரியானா மாநிலத்தின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியானாவில் போராட்டம் நடைபெறும் சில பகுதிகளில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. 

ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மத்திய அமைச்சர் வேண்டுகோள்..!