ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மத்திய அமைச்சர் வேண்டுகோள்..!
ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடரும் போராட்டம்
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.
குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
பீகார் மாநிலம் தன்பூர் ரயில் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தினர்.
ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பங்களும் அரங்கேறின. இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
200க்கும் மேற்பட்ட ரயில்கள் சேதம்
இந்த போராட்டம் காரணமாக இதனால், சுமார் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும், அதற்கு பதில் நிரந்தர வேலை வாய்ப்பு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அமைச்சர் வேண்டுகோள்
இந்த போராட்டம் காரணமாக டெல்லி கேட் மற்றும் மஜ்ஜித் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன இந்நிலையில் அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையை தவிர்க்குமாறும்,
ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
#WATCH | I appeal to the youth to not indulge in violent protests and not damage the property of the Railways. Railways are the property of the country: Union Railways Minister Ashwini Vaishnaw on #AgnipathProtests pic.twitter.com/TIDMlF2PeI
— ANI (@ANI) June 17, 2022