அக்னிபத் திட்டத்தின் பணிக்கான வயதை 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தியது மத்திய அரசு..!
அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரித்து பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.
'அக்னிபத்' திட்டம்
ராணுவம்,விமானப்படை,கடற்படை உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய பாதுகாப்பு படைகளில் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள்,
தற்காலிகமாக 4 ஆண்டுகள் வரை பணியாற்றுவதற்கான புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டார்.
இந்த 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 46 ஆயிரம் வீரர்கள் வரை பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதுடன்,
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் வழக்கமான பணி நியமனங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை பார்த்த 25% நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.
அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வயது வரம்பு உயர்வு
இந்தப் பணி நியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரித்து பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.
'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் வெடித்தது போராட்டம்..!