நுபுர் சர்மாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை - இருவர் உயிரிழப்பு..!
நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இதில் இருவர் உயிரிழந்தனர்.
இழிவு பேச்சு
கடந்த 27-ம் தேதி முன்பு ஞானவாபி மதவழிபாடு தலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா,முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.இதையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் அக்கட்சி நீக்கியது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருவர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்நிலையில் ராஞ்சியில் நடந்த வன்முறையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
முற்றுகிறது முறுகல் : கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா IBC Tamil