கலவரமான அதிமுக அலுவலகம் : பதட்டத்தை தணிக்க 144 தடை உத்தரவு

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jul 11, 2022 05:38 AM GMT
Report

அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. கூட்டத்தை புறக்கணித்த ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

கலவரமான கட்சி அலுவலகம்

ஓபிஎஸ் வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரமான அதிமுக அலுவலகம் : பதட்டத்தை தணிக்க  144 தடை உத்தரவு | 144 In The Area Where The Aiadmk Office

அத்துடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு கட்டத்தில் தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது.   


144 தடை உத்தரவு

இந்நிலையில் உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்தில் குவிந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதில் பலன் இல்லாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கலவரமான அதிமுக அலுவலகம் : பதட்டத்தை தணிக்க  144 தடை உத்தரவு | 144 In The Area Where The Aiadmk Office

கலவரமான சூழல் சென்னை ராயப்பேட்டை பகுதியில் நிலவி வருவதால் அதிமுக அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லும் ஈபிஎஸ்..