பிரபல மாடல் அழகியை 2-வது திருணம் செய்த 'சொமேட்டோ' CEO - யார் அவர்?
சொமேட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் மெக்சிகன் தொழிலதிபர் ஒருவரை மணந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொமேட்டோ சிஇஓ 
பிரபல உணவு டெலிவரி சேவை நிறுவனமான சொமேட்டோ-வின் (Zomato) தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், மெக்சிகன் தொழிலதிபர் கிரேசியா முனோஸை மணந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் மாடல் அழகியான கிரேசியா தற்போது ஆடம்பர நுகர்வோர் தயாரிப்புகளில் ஈடுபடும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி சொந்தமாக நிர்வாகம் செய்து வருகிறார். இதற்கிடையே அவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில், தான் மெக்சிகோவில் பிறந்ததாகவும், தற்போது இந்தியாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம்
இந்நிலையில் கோயல் மற்றும் கிரேசியா ஆகியோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும். இருவரும் தேனிலவுக்குச் சென்றுவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

41 வயதான தீபிந்தர் கோயலுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அவர் முன்னதாக டெல்லி ஐஐடியில் படிக்கும் போது சந்தித்த காஞ்சன் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    