நண்பர்கள் தினம்; வாடிக்கையாளர்களுக்கு நேரில் சர்ப்ரைஸ் கொடுத்த சோமேட்டோ CEO - என்னனு தெரியுமா?

Friendship day International Friendship Day India Zomato
By Jiyath Aug 06, 2023 08:19 AM GMT
Report

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரியும் செய்து சர்ப்ரைஸும் கொடுத்துள்ளார் சோமேட்டோ CEO தீபிந்தர் கோயல். 

நண்பர்கள் தினம்

ஆண்டும் ஆகஸ்ட் மதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை 'ப்ரண்ட்ஷிப் டே' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நமது வாழ்வில் நண்பர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

நண்பர்கள் தினம்; வாடிக்கையாளர்களுக்கு நேரில் சர்ப்ரைஸ் கொடுத்த சோமேட்டோ CEO - என்னனு தெரியுமா? | Zomato Ceo Deepinder Goyals Surprizes Customers

நமது வாழ்க்கையின் ஏற்றத்திலும் இயக்கத்திலும் நமது குடும்பத்தைத் தாண்டி துணையாக நிற்கும் ஒரு உறவு என்றால் அது நட்பு தான். நட்பு தினம் என்பது இதயப்பூர்வமான உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாள், மேலும் இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்ப்ரைஸ் கொடுக்கும் சோமேட்டோ

இந்நிலையில் ப்ரண்ட்ஷிப் டேவை சிறப்பாக கொண்டாடும் வகையில் சோமேட்டோ CEO தீபிந்தர் கோயல் அவரே உணவை விநியோகம் செய்ய ராயல் என்பீல்டு பைக்கில் புறப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'எங்கள் டெலிவரி பார்ட்னர்கள், ரெஸ்டாரன்ட் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சில உணவு மற்றும் நட்பு பேண்டுகளை வழங்கப் போகிறோம். இது ஒரு சிறப்பு ஞாயிறு என்று பதிவிட்டுள்ளார்.