அம்பானியின் 'ஜியோ வேர்ல்டு கார்டன்' - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான 'தி ஜியோ வேர்ல்டு கார்டன்' குறித்த தகவல்.
ஜியோ வேர்ல்டு கார்டன்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான 'தி ஜியோ வேர்ல்டு கார்டன்' மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் மரங்கள், குளங்கள், ஆங்காங்கே அமர இருக்கைகள் ஆகியவை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவான இடமாக உள்ளது.
இது 5 லட்சம் சதுர அடியில் செடிகள் மற்றும் பூக்களால் நிறைந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. புகழ்பெற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேறியுள்ளன. குறிப்பாக லேக்மீ ஃபேஷன் வீக், அரிஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி, எட் ஷீரனின் கலை நிகழ்ச்சி போன்ற சர்வதேச நிகழ்வுகள் ஆகியவை இங்கு நடைபெற்றுள்ளது.
ஒரு நாள் வாடகை?
தற்போது மும்பையில் உள்ள பணக்காரர்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஜியோ கார்டன் மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது. சர்வதேச கலையரங்கம், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வைஃபை வசதி , 2000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.
இங்கு நிகழ்ச்சிகள் நடத்த நாளொன்றுக்கு ரூ.15 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஜியோ கார்டனில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தாவுக்கு திருமணம் நடைபெற்றது.