வேலையே செய்யாமல் ஒரு இரவுக்கு ரூ.31,000 சம்பாதிக்கும் நபர் - சுவாரஸ்ய தகவல்!
United States of America
World
By Jiyath
a year ago
நபர் ஒருவர் மர வீட்டின் மூலம் ஒரு இரவுக்கு ரூ.31,000 சம்பாதித்து வருகிறார்.
மர வீடு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா அருகே வசித்து வந்தவர் பீட்டர் பஹூத். அங்கு இவர் வாங்கிய வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் உயர்ந்த மரங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.
பின்னர் அந்த மரங்களில் வீடு கட்ட வேண்டும் என்று விரும்பினார். இதனையடுத்து அந்த நிலத்தை வாங்கி அங்கிருந்த 8 அடி உயர மரத்தில் ஒரு சிறிய மர வீடு கட்டியுள்ளார்.
சம்பாத்தியம்
இதனையடுத்து படிப்படியாக அதை 3 படுக்கை அறைகள் கொண்ட வீடாக விரிவாக்கம் செய்துள்ளார். இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
இதனால் பொழுதுபோக்கிற்காக கட்டிய அந்த மர வீட்டின் மூலம், தற்போது ஒரு இரவுக்கு ரூ.31,000 சம்பாதிக்கிறார். மக்கள் பலரும் பணம் செலுத்தி அங்கு தங்க மிகவும் விரும்புகின்றனர்.