நன்றிக்கெட்டவர் என்ற டிரம்ப் - திரும்ப 'நன்றி' கூறி வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி!
நன்றிக் கெட்டவர் என டிரம்ப் விமர்சித்த நிலையில், ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
டிரம்ப் விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனை தற்போது முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ரஷ்ய அதிபர் புடினிடம் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அப்போது டிரம்ப், ஜேடி வான்ஸ் ஆகியோர் ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெலன்ஸ்கியை வலியுறுத்தினர்.
நன்றி சொன்ன ஜெலன்ஸ்கி
ஆனால் ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்தார். அதில், மெரிக்கா உங்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளது. அதற்காக நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று டிரம்ப் ஆவேசமாக தெரிவித்தார். இதனையடுத்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து, ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நிச்சயமாக, அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
நன்றியுணர்வை உணராத ஒரு நாளே இல்லை. நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு இது. உக்ரைனில் நமது மீள்தன்மை நமது கூட்டாளிகள் நமக்காகவும் அவர்களின் சொந்தப் பாதுகாப்பிற்காகவும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தது" எனத் தெரிவித்துள்ளார்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
