2016-ல் நடந்த சம்பவம்.. ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம்-பின்னணி என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிபர் டிரம்ப்
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா - உக்ரைனிடையே போர் தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப், இந்த போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அப்போது கனிமவள பகிர்வு ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் திட்டமிட்டு இருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வேன்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடையே காரசார விவாதங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் வார்த்தைப் போர் முற்றியது .உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். தற்பொழுது ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்கக் காரணம் வெளியாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற போது ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர் சிலர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பெர்னி சாண்டர்ஸ்க்கு பதில் ஹிலாரி கிளிண்டன் வர வேண்டும் என கட்சி தலைமை விரும்பியதாகத் தகவல் வெளியானது.
காரணம்
இது அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியது. மேலும் டிரம்ப்யை எதிர்த்து ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார். இதற்கு டிரம்ப் தெரிவித்து இருந்தார். மேலும் ரஷ்யா மீது அவதூறுகளை வீச உக்ரைன் ஹேக்கர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதுதொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் தொலைப்பேசியில் பேசிய டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைனில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி, இந்த விவகாரத்தில் உக்ரைனின் தலையீடு தொடர்பான கருத்துக்கு வலுசேர்க்கும் எனக்கூறி இறுதி வரை விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டார். இதுதான் அமெரிக்காடிரம்ப், அதிபர் ஜெலன்ஸ்கி மீது கடுமையாக நடந்துகொள்ள காரணம் என்றும் கூறப்படுகிறது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
