ஷிவோன் சில்லிஸ் உடன் 4வது குழந்தை - 14வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்!
எலான் மஸ்க் 14 ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகத்தில், DOGE எனப்படும் அரசு செயல்திறன் துறைக்கு தலைமை வகித்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்துள்ளது. 2000ல் கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. பின் அவருடன் 5 குழந்தைகளை பெற்றெடுத்தார். தொடர்ந்து, பிரபல நடிகையான ரிலேவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
14வது குழந்தை
ஆனால் அவருடன் எந்த குழந்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து பாடகியான க்ரீம்ஸுடன் எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
எலான் மஸ்கின் 13-ஆவது குழந்தையைப் பெற்றெடுத்ததாக ஆஷ்லே கிளேர் என்பவர் அறிவித்த நிலையில், தற்போது ஷிவோன் சில்லிஸுடன் 4வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதன் மூலம் 14-ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். முன்னதாக பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது மிகப்பெரிய ஆபத்து. அதிக அறிவாற்றல் உடையவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.