தாயும் - மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம்; ஒரே தந்தையாம்.. மிரண்ட மருத்துவர்கள்!
தாய் – மகள் ஒரே நபரின் குழந்தையை வயிற்றில் சுமக்கின்றனர்.
தாய் - மகள் கர்ப்பம்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேனி ஸ்விங்(44). இவரது மகள் ஜேட் டீன்(22). தாயும் தந்தையும் விவாகரத்து செய்த நிலையில், ஜேட் தாயுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தாய் நிக்கோலஸ் என்ற இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதில் நிக்கோலஸ் மீது வளர்ப்பு மகள் ஜேட்டிற்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் அதிர்ச்சி
தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அதில் மகள் கர்ப்பமாகியுள்ளார். மறுபுறம் தாய் டேனி ஸ்விங்கும் கர்ப்பமடைந்துள்ளார்.
பின் மருத்துவ பரிசோதனையில் இருவர் வயிற்றில் வளரும் கருவுக்கு நிக்கோலஸ் தான் தந்தை என்ற விபரம் தெரிய வரவே, மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது இதுகுறித்து பேட்டியளித்துள்ள நிக்கோலஸ், "முன்பு நாங்கள் 3 பேர் இருந்தோம். இப்போது நாங்கள் 5 பேர் ஆகப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார். "நாங்கள் இப்போது ஒரே வீட்டில் இருக்கிறோம். அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என தாய் டேனி கூறியுள்ளார்.