சூப்பர் மார்க்கெட் பொருட்களில் சிறுநீர் கலப்பு - 4 வருடமாக இளம்பெண் செய்த அசிங்கம்
சூப்பர் மார்க்கெட் பொருட்களின் மீது சிறுநீர் கலந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டில் சிறுநீர்
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு வருகை தந்த 23 வயதான கெல்லி டெட்போர்ட்(Kelli Tedford) என்ற பெண் அங்குள்ள உணவு பொருட்கள் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உரிமையாளர் வேண்டுகோள்
அந்த பெண்ணின் சமூகவலைத்தள கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், 2021 ஆம் ஆண்டு முதலே இது போல் உணவு பொருட்களின் மீது சிறுநீர் கழித்து வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.
இது குறித்து பேசிய அந்த கடையின் உரிமையாளர், சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து, சோள மாவு, தேங்காய் துண்டுகள், வால்நட்ஸ் ஆகிய பொருட்களை அகற்றி விட்டோம். இதனால், 1500 டாலர்(இந்தியா மதிப்பில் 1.31 லட்சம்) இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அகற்றப்பட்ட பொருட்களை வாங்கியவர்கள் அதை தூர எறிந்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.