எம்.எஸ்.தோனிக்கு இடமில்லை; அதிர்ச்சி கொடுத்த யுவராஜ் சிங் - கொதிக்கும் ரசிகர்கள்!
யுவராஜ் சிங்
உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் - யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
இதில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனிடையே பேட்டியொன்றில் பேசிய யுவராஜ் சிங், தனது ஆல்டைம் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தார்.
அதில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்ற போதிலும், எம்.எஸ். தோனியை அணியில் குறிப்பிடாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கை அவர் தேர்வு செய்தார்.
சிறந்த 11 வீரர்கள்
3-வது மற்றும் 4-வது இடங்களில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றனர். 5-வது வீரராக ஏபி டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆல்ரவுண்டராக ஆண்ட்ரூ ஃபிளிண்டாப் இடம்பிடித்தார். மேலும், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கிளென் மெக்ராத், மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் 4 பவுலர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாற்று வீரர் யாராவது இருப்பார்களா என்ற கேள்விக்கு, 12-வது வீரராக தனது பெயரை யுவராஜ் சிங் கூறினார். ஆனால், தனது பேட்டிங் பார்ட்னர் மற்றும் இந்திய அணியை 3 முறை கோப்பை வெல்ல வழிநடத்திய கேப்டன் தோனியின் பெயரை குறிப்பிடாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.