இறுதி போட்டியில் பாகிஸ்தானை பொளந்து கட்டிய இந்தியா!! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி
உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
இறுதி போட்டி
2007-ஆம் ஆண்டு டி20 தொடர் இறுதி போட்டியில் விளையாடிய பல வீரர்கள், இந்த போட்டியில் களமிறங்கினர். இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்புகளை கொடுத்தது.
பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 156/6 ரன்களை குவித்தது. அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலில் 41(36) ரன்களை எடுத்தார்.
அவரை தொடர்ந்து கம்ரன் அக்மல் 24(19) ரன்னை எடுத்தார். இந்திய அணியில் அனுரீத் சிங் 4 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியா வெற்றி
157 ரன்களை எடுத்தால் வெற்றி என களம் கண்ட இந்தியா சாம்பியன்ஸ் அணியில் ஓப்பனராக வந்த அம்பத்தி ராயுடு அரை சதம் விளாசினார். அவர் 30 பந்துகளில் 50 ரன் எடுத்து வெளியேறினார்.
நிதானமாக விளையாடிய யுவராஜ் ரசிகர்களை அதிரவைத்த நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய யூசுப் பதான் 30(16) வேகமாக அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார்.
கடைசி ஓவரின் முதல் பந்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்து கோப்பையை தனதாக்கியது. இதே தொடரில் நடைபெற்ற லீக் மேட்சில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது இந்தியா சாம்பியன்ஸ் அணி.