இரவு பார்ட்டி, பெண் தோழிகள்; ஜாலியாக சுற்றிய ஷர்மா - கொதித்த யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளது.
அபிஷேக் ஷர்மா
ஐபிஎல் தொடரிலும், இந்திய டி20 அணியிலும் பேட்ஸ்மேனாக அறியப்பட்டவர் அபிஷேக் ஷர்மா. இவரை பயிற்சி அளித்து வளர்த்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்தான்.
இந்நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், பேசியுள்ளார். "அபிஷேக் ஷர்மா அப்போது இரவு நேரப் பார்ட்டிகள், பெண் தோழிகள் என்று இருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம் 'அபிஷேக் ஷர்மாவை வீட்டிலேயே அடைத்து வையுங்கள்' என்றார்.
ஆனால், அவரது தந்தையால் அபிஷேக் ஷர்மாவை கையாள முடியவில்லை. அதன் பின்னர் யுவராஜ் சிங் தனது கட்டுப்பாட்டில் அபிஷேக் ஷர்மாவை கொண்டு வந்தார். நாங்கள் அபிஷேக் ஷர்மாவின் செயல்பாடுகளைப் பற்றி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திலும் அதன் பயிற்சியாளர்களிடமும் விசாரித்தோம்.
யுவராஜ் செயல்
அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? 'சார், இவர் ஒரு பந்துவீச்சாளர். இவர் பந்துவீச மட்டும் தான் செய்வார். அதன் பிறகு யுவராஜ் சிங் 'அவரது ரெக்கார்டை எடுத்து காட்டுங்கள்' என்றார். அப்போது நாங்கள் அவரது ரெக்கார்டை பார்த்தோம். அவர் அப்போதே 24 சதங்களை அடித்திருந்தார்.
அதன் பிறகு யுவராஜ் சிங் அவர்களிடம் 'ஏன் தவறான தகவல்களை கொடுக்கிறீர்கள்? இந்த பையன் 24 சதங்களை அடித்து இருக்கிறான்' என்றார். ஒரு வீரரைப் பற்றி சரியான தகவல்களைப் பகிர வேண்டும்.
இதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது. சிலர் பொறாமையின் காரணமாக சில வீரர்களின் வாழ்க்கையை முடித்துவிடப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.