கோலிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் - வீடியோவை வைத்து பதிலடி கொடுத்த ஆர்சிபி
ஸ்ரேயாஸ் ஐயரைப் பார்த்து கோலி செய்த செயல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RCB vs PBK
ஐபிஎல் சூப்பர் ஞாயிறில் நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணியை பெங்களூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
இது ஆர்சிபி-யின் 5வது வெற்றி. இந்த போட்டியில் 73 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பெங்களூர் அணி வெற்றி பெற்றதும் கோலி நடனமாடி, ஸ்ரேயாஸ் ஐயரை நோக்கி சில வார்த்தைகள் பேசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
கோலியின் செயல்
அதைக் கண்டு கோபமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் கோலியிடம் சென்று பேசினர. பின் இருவரும் பேசி சமாதானமாக சென்றனர். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர், இளம் வீரர்கள் இதுபோல செய்தால் மட்டும் அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது.
ஆனால் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எந்தத் தண்டனையும் பிசிசிஐ அளிப்பதில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூரு ரசிகர்களை கேலி செய்தார். அதற்கெல்லாம் கோலி கொடுத்த பதிலடிதான் இந்த கொண்டாட்டம் என்று அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எதிரணி வீரர்களைக் கோபமடையச் செய்தல், தூண்டுதல், சீண்டுதல் போன்ற செயல்களைச் செய்தால் அதற்குத் தண்டனை அளிக்கப்படும். இது ஐபிஎல் விதிமுறைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.