சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் முன்னணி வீரர் விலகல் - பலத்த பின்னடைவு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய வீரர் விலகியுள்ளார்.
ஆடம் ஜாம்பா விலகல்
18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி மற்றும் 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த அணி பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மரண் ஒப்பந்தம்
எனவே அவருக்கு பதிலாக 21 வயதான கர்நாடகாவை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான ஸ்மரண் ரவிச்சந்திரன் என்பவரை அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்மரண் கர்நாடகா அணிக்காக இதுவரை 7 முதல்தர போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 500 ரன்கள் குவித்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 72 ரன்கள் சராசரியுடனும் 2 சதங்களுடனும் 433 ரன்களை குவித்துள்ளார்.
6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.