மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் - மாமனரை வைத்து போட்ட ஸ்கெட்ச்!
மனைவியின் தங்கையை இளைஞர் ஒருவர் கர்ப்பமாக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரகசிய திருமணம்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆழ்வான்(35). இவர் சென்னையைச் சேர்ந்த சாமுவேல் என்பவரது மகள் சோனியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து, சோனியா கர்ப்பமாக இருந்த நிலையில் அவரை பார்த்துக் கொள்ள அவரது இரட்டை சகோதரியான சொர்ணா வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு சொர்ணாவுடன் ஆழ்வான் நெருங்கி பழகிய நிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துள்ளனர்.
மாமனார் கடத்தல்
மேலும், சொர்ணா கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்த சோனியா சண்டையிடவே, சமாதானமாகி இருவரும் கணவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கம் அதிகமானதால் ஆழ்வான், சோனியாவையும், சொர்ணாவையும் அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதனால் இருவரும் தங்கள் தாய் வீட்டிற்கே சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆழ்வான் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு சண்டையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் வர மறுத்ததால், மாமனார் சாமுவேலை கடத்தி வைத்துக் கொண்டு, தன்னுடன் வராவிட்டால் அவரை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்து புகாரளித்த நிலையில் செல்போனை ட்ராக் செய்து மாதவரத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சாமுவேலை மீட்டு, ஆழ்வானையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், ஆழ்வானுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளதும், அதை மறைத்து மீண்டும் இரண்டு திருமணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.