காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்..? காதலி அளித்த பரபரப்பு புகார்..!
பெங்களூருவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் மீது அவரது காதலி அளித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரியப்பா
ஐ.பி.எல் தொடர்களில் பஞ்சாப்,ராஜஸ்தான்,கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியுள்ளவர் கரியப்பா. பெங்களூரை சேர்ந்த இவர் மீது தற்போது இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
இவரின் காதலி மட்டுமின்றி இவரும் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.பெங்களூரின் பாகல்குண்டே போலீஸ் நிலையத்தில் கரியப்பா அளித்த புகாரில், ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, தங்களுக்குள் இருந்த காதல் முறிந்தததாக குறிப்பிட்டு, அந்த பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது தன் வீட்டருகில் வந்து, தகராறு செய்வதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ள கரியப்பா, தன் கிரிக்கெட் எதிர்காலத்தை பாழாக்குவதாகவும், தன் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை குறித்து அவதுாறாக செய்தி வெளியிடுவதாகவும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ள அவர் தன்னை மனரீதியில் துன்புறுத்துகிறார் என்றும் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, தகாத வார்த்தைகளால் திட்டுகிறார் - ஆன்லைனில் கத்தி வாங்கி, மிரட்டல் விடுக்கிறார்' என தெரிவித்துள்ளார்.
காதலி புகார்
இதே போல் கரியப்பாவின் காதலி ஆர்.டி.நகர் போலீஸில் நிலையத்தில் அளித்த புகாரில் 'எனக்கு 2018ல், திருமணம் நடந்தது; 2020ல் விவாகரத்தானது. ஒன்றரை ஆண்டுக்கு முன், எனக்கு காரியப்பா அறிமுகமானார். நாளடைவில் காதலிக்க துவங்கினோம்.
அவர், திருமணம் செய்து கொள்வதாக, வாக்குறுதி அளித்தார். எங்களுக்குள் உடல் ரீதியான நெருக்கமும் இருந்தது. இதில் நான் கர்ப்பமடைந்தேன். எனக்கு மாத்திரைகொடுத்து, கருக்கலைப்பு செய்தார். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட போது மறுத்தார். இது குறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர் கேட்டுக்கொண்டதால் புகார் திரும்ப பெறப்பட்டது.
திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, என்னிடம் 2 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். அதன்பின் தன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, திருமணத்துக்கு மறுக்கிறார். இப்போது என் மீது, குற்றம் சாட்டுகிறார் என புகார் அளித்துள்ளார்.மேலும் கரியப்பா போதை பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.