காதலியுடன் குதூகல பயணம்; நடு ரோட்டில் ஜோடி செய்த செயலுக்கு போலீஸ் வைத்த ஆப்பு!
பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
காதல் ஜோடி
பொது இடங்களில் நடந்து கொள்வதற்கு சில வரைமுறைகள் உள்ளது. ஆனால் ஒரு சில காதல் ஜோடிகள் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் என்று பார்ப்பதில்லை. காதல் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லை.

அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
போலீஸ் ஆப்பு
அப்போது வழியாக தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் இந்த ஜோடி நடு ரோட்டில் செய்த காரியத்தை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பிறகு ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan