எல்லை மீறும் காதல் ஜோடிகள்; மெட்ரோ ரயிலில் இப்படியா? முகம் சுழிக்கும் பயணிகள் - viral video!
மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடி எல்லை மீறி நடந்ததுகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடிகள்
பொது இடங்களில் நடந்து கொள்வதற்கு சில வரைமுறைகள் உள்ளது. ஆனால் ஒரு சில காதல் ஜோடிகள் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் என்று பார்ப்பதில்லை. காதல் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லை. அந்த வகையில், டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சண்டை போட்டது,
ஆபாச செயல்களில் ஈடுபட்டது, மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றது என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களல் பரவி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், தற்போது பெங்களூருவில் மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்ஜோடி மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில்
அதில், மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகளுக்கு அருகே இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டு கொள்கின்றனர். இதனால் அந்த ரயிலில் இருந்த பயணிகள் பலர் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சம்பந்தப்பட்ட தம்பதி மீது மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆக்ரோஷமாக கருத்துக்களை பதிவிட்டனர். இதை தொடர்ந்து பெங்களூரு போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.