சாம்பிராணி போடும் சாக்கில் 6 வயது சிறுமியை சீரழித்த இளைஞர் - அதிர்ச்சி!
இளைஞர் ஒருவர் 6 வயது சிறுமியை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பிராணி இளைஞர்
ஆந்திர மாநிலம், சித்துார் அருகே உள்ள பெத்தபஞ்சாணி பகுதியைச் சேர்ந்தவர் காலேஷா 25 வயதான இவர் குடியாத்தம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவர் குடியாத்தம் நகரில் உள்ள கடைகளுக்கு சாம்பிராணி புகைபோடும் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் காட்பாடி சாலையில் உள்ள கடைகளுக்கு புகைபோட சென்றார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், இவர் சாம்பிராணி புகை போடும்போது அங்குள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காலஷாவை பிடித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அனைத்து மகளிர் போலீசிஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தில் காலேஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம் IBC Tamil