உருகி உருகி காதலித்த இளம்பெண்.. அந்தரங்க வீடியோவை காட்டி வாலிபர் செய்த கொடூரம்!
அந்தரங்க வீடியோவை காட்டி வாலிபர் ஒரு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரிடம் மோகன்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில், காலிப்பதாகஆசை வார்த்தை கூறி, நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த வாலிபர் காதலிக்கும்போது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சம் அடைந்த இளம்பெண் பணம் தந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் உயர் ரக கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். இப்படித் தொடர்ந்து பல மாதங்களாகவே வாலிபர் மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
மோசடி
சுமார் அந்த பெண்ணை மிரட்டி மொத்தம் ரூ.1.32 கோடி பணத்தை வாலிபர் மோகன்குமார் பெற்றுள்ளார். இந்த சம்பவம், தொடர்பாகக் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்தார். இதையடுத்து காதலன் மோகன்குமாரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த சம்பவத்திற்குப் பல மாதமாகத் திட்டம் தீட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளார்.அவரிடம் இருந்து சுமார் ரூ.2.5 கோடி மிரட்டி பணம் பறித்ததாகவும், அதில் ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.