பிறப்புறுப்பில் ரத்த காயம்.. 7 மாத குழந்தைக்கு நடத்த கொடூரம் - பதற வைக்கும் சம்பவம்!

Sexual harassment India West Bengal
By Vidhya Senthil Dec 06, 2024 07:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 7 மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 7 மாத குழந்தை

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபாதை அருகே உள்ள வீட்டில் தம்பதி மற்றும் 7 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் 7 மாத குழந்தை அழுத நிலையிலிருந்துள்ளது.அப்போது அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தார்.

7-month-old girl sexually assaulted in west benngal

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் குழந்தையை மீட்டனர். அதன் பிறகு குழந்தையை மீட்டு பரிசோதனை செய்வதற்காக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

கலப்பு திருமணம் செய்த பெண் காவலர்.. ஓட ஓட விரட்டி கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!

கலப்பு திருமணம் செய்த பெண் காவலர்.. ஓட ஓட விரட்டி கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!

குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் பல கீறல்களின் அடையாளங்கள் இருந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 பாலியல் வன்கொடுமை

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்ப நபர் சிலர் 7 மாத குழந்தையை நடைபாதையிலிருந்து எங்கோ தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் நடைபாதைக்கே கொண்டு விட்டுவிட்டது தெரியவந்துள்ளது.

7-month-old girl sexually assaulted in west benngal

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிர விசாரணை ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் , 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.