வாரிசாக நினைத்த அண்ணன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக தம்பியின் கொடூர செயல் -அதிர்ச்சி வாக்குமூலம்!
இன்சூரன்ஸ் பணத்திற்காக அண்ணனைத் தம்பி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மன்மந்த கோபால் தல்வார், 35. இவரது தம்பி பசவராஜ் தல்வார். இந்த நிலையில் மன்மந்த கோபால் தல்வார் தன்னுடய பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு திருமணம் ஆகாததால் வாரிசாக தனது சகோதரர் பசவராஜ் தல்வார் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலை அறிந்த பசவராஜ் தல்வார் அந்த பணத்தை அடையத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மிக பெரிய திட்டத்தை தீட்டியுள்ளார்.
அக்., 7ம் தேதி அண்னன் மன்மந்த கோபால் தல்வார், தம்பி பசவராஜ் தல்வார் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டுச் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு கரும்பு தோட்டத்திற்கு மன்மந்த கோபால் தல்வாரை அழைத்து சென்று தலையில் இரும்புக் கம்பியால் பலமாக அடித்ததில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
கொலை
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரது சகோதரர் பசவராஜ் தல்வார், அவரது நண்பர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களின் மொபைல் போன் சிக்னலை வைத்து கைது செய்தனர்.அப்போது பசவராஜ் தல்வாரிடம் நடத்திய விசாரணையில், இன்சூரன்ஸ் பணத்துக்காக மன்மந்தகோபால் தல்வாரை கொலை செய்ததது தெரியவந்தது.