கலப்பு திருமணம் செய்த பெண் காவலர்.. ஓட ஓட விரட்டி கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!
கலப்பு திருமணம் செய்து கொண்ட தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நாகமணி காவலராக வேலை வந்துள்ளார். இவருக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் என்பவருடன் நாகமணி பழகி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த நவம்பர் 19-ந்தேதி யாதகிரிகட்டா பகுதியில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி 2 -வது திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்ரீகாந்த் மற்றும் நாகமணியின் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நாகமணி வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுள்ளார்.
கொலை
அப்போது அவருடைய சகோதரர் பரமேஷ் காரில் மோதியுள்ளார்.இதில் நிலைதடுமாறி நாகமணி கீழே விழுந்தார். அந்த நேரம் பரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகமணியைக் குத்தி விட்டு அந்த இடத்தில் தப்பிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.