சமையல் செய்யாமல் வீட்டில் இருந்த மகள்..குக்கரால் அடித்துக் கொலை செய்த தந்தை!
பெற்ற மகளையே தந்தை, குக்கரால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் முகேஷ் பர்மர்.இவர் அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்த சுழலில் கடந்த சில நாட்களாக முகேஷ்க்கு உடல் நிலை சரியில்லாததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். இந்த நிலையில் முகேஷும் அவரது இளைய மகள் ஹெடாலியும் (18 வயது) மட்டும் வீட்டிலிருந்தனர். அப்போது தந்தைக்கு உணவு சமைத்துக் கொடுக்கும்படி ஹெடாலியிடம் கூறிவிட்டு அவரது தாய் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அடித்துக் கொலை
இதனையடுத்து ஹெடாலி சமையல் செய்யாமல் வீட்டில் உள்ள மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். இதனால் தந்தைக்கும் மகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் கோவத்தில் சமையலறையில் இருந்த குக்கரை எடுத்து ஹெடாலியின் தலை மற்றும் முகத்தில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஹெடாலி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.