7 வயது சிறுவனை கதவில் கட்டி வைத்து அடித்த ஆசிரியர் - காரணத்தை கேட்டு மிரண்டு போன போலீஸ்!
7 வயது மாணவனைப் பள்ளி வகுப்பறை கதவில் ஆசிரியர் ஒருவர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா
ஒடிசா மாநிலம், கேந்திரப்பாரா மாவட்டத்தில் தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வகுப்பிலிருந்த ஆசிரியருக்கு இடையூறாக இருந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் , மற்ற மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவனின் செயலால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.அதன் பிறகு, பள்ளி நுழைவு வாசலிலிருந்த கதவில் கட்டி வைத்து, அடித்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அடித்த சம்பவம்
இந்த சம்பவத்தால் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
இந்த சம்பவம், கடந்த நவம்பர் 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.