மகனை கண்டித்த தந்தை.. பெற்றோரின் திருமண நாளில் கொலை செய்து நாடகமாடிய பயங்கரம்!
தாய் ,தந்தை, தங்கையை மகனே தீர்த்துக்கட்டி நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி
டெல்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் தன்வா -கோமல் தம்பதியினர் . இந்த தம்பதிக்கு ஒரு மகளும் , மகனும் உள்ளனர். இந்நிலையில், சம்பத்தன்று அதிகாலை 5 மணி அளவில் நடைப்பயிற்சிக்குச் சென்ற மகன் அர்ஜூன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டில் உள்ள தந்தை, தாய் மற்றும் சகோதரி மூவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ஜூன் கதறி அழுதுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மகன்
அப்போது அர்ஜூனிடம் விசாரணை நடத்தப்பட்டதில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்துள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் , தந்தை மற்றும் தங்கையுடன் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அர்ஜூன் பெற்றோரின் திருமண நாளில் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
நள்ளிரவில் ராணுவ கத்தியைக் கொண்டு மூவரையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து அதிகாலை 5 மணி அளவில் அர்ஜூன் நடைப்பயிற்சிக்குச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.