நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், தந்தை - மகனுக்கு அறையில் காத்திருந்த அதிர்ச்சி!

Delhi Crime Murder
By Vidhya Senthil Dec 04, 2024 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி

டெல்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் தன்வா -கோமல் தம்பதியினர் . இந்த தம்பதிக்கு ஒரு மகளும் , மகனும் உள்ளனர். இந்நிலையில், சம்பத்தன்று அதிகாலை 5 மணி அளவில் நடைப்பயிற்சிக்குச் சென்ற மகன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.

நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், தந்தை - மகனுக்கு அறையில் காத்திருந்த அதிர்ச்சி! | Husband Wife And Daughter Death Delhi

அப்போது வீட்டில் உள்ள தந்தை, தாய் மற்றும் சகோதரி மூவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகன், கதறி அழுதுள்ளார்.

கலப்பு திருமணம் செய்த பெண் காவலர்.. ஓட ஓட விரட்டி கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!

கலப்பு திருமணம் செய்த பெண் காவலர்.. ஓட ஓட விரட்டி கொலை - பட்டப்பகலில் பயங்கரம்!

கொலை

இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், தந்தை - மகனுக்கு அறையில் காத்திருந்த அதிர்ச்சி! | Husband Wife And Daughter Death Delhi

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.