ஆண் நண்பருடன் சென்ற மனைவி - காருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்த கணவன்!
மனைவியைக் காருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன்-அனிலா தம்பதியினர்.திருமணமான நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாகச் சண்டை இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை அனிலா தனது ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் சென்ற காரை பத்மராஜன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பத்மராஜன் காரை பின் தொடர்ந்து சென்றார். இதனையடுத்து செம்மாமுக்கு என்ற பகுதியில் அருகே அனிலா சென்ற காரை பத்மராஜன் இடைமறித்து நிறுத்தியுள்ளார்.
அப்போது பத்மராஜன் மற்றும் அனிலா வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் முற்றவே ஆத்திரமடைந்த பத்மராஜன் அந்த கார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.அப்போது காருக்குள் இருந்த அனிலா மற்றும் அவரது ஆண் நண்பருக்குப் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
கொலை
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காரில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அனிலா உயிரிழந்தார்.அவருடன் சென்ற மற்றொரு நபர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பத்மராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.