அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட மகன்.. துடிக்க துடிக்க அடித்து கொலை செய்த தந்தை - பகீர் சம்பவம்!
அதிக சத்தத்துடன் பாடல் கேட்டதால் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலங்கை
இலங்கையில் உள்ள பூண்டுலோயா காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் நவீன்குமார் என்ற 25 வயதுடைய இளைஞர் தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் (வயது 16)வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த நவீன்குமார் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.அந்த சமயத்தில் நவீன்குமாரின் தந்தை அதிக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது நவீன்குமாரிடம் சத்தத்தைக் குறைக்கச் சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தந்தையைத் தாக்கியுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தம்பி தடுக்க முயன்ற போது தம்பியையும் கட்டையால் சரமாரியாக அடுத்துள்ளார்.
அடித்து கொலை
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மற்றும் தம்பி நவீன்குமாரைக் கட்டையால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம், குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பூண்டுலோயா காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
நவீன்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை செய்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தந்தையே மகனைக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.