கொலை செய்ய BMW காரை வாடகைக்கு எடுத்த நபர் - விசாரணையில் வெளியான பகீர் பின்னணி?
BMW காரை ஓட்டி வந்த சவூதி அரேபிய மருத்துவர் மக்கள் மீது சரமாரியாக மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
BMW கார்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இன்னும் 4 நாட்களே உள்ளது. இதற்காக ஜெர்மனி நாட்டின் மக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அப்போது திடீரென மார்க்கெட்டுக்குள் கார் ஒன்று அதிவேகத்தில் புகுந்து அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள் காரை ஓட்டி வந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பகீர் பின்னணி?
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதான தலேப் என்பது தெரியவந்தது. சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறிய தலேப் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வந்தது தெரியவந்தது.
மேலும் மக்கள் மீது தாக்குதல் நடத்த BMW காரை வாடகைக்கு எடுத்ததது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இந்த செயலை அவர் மட்டும் தனியாகச் செய்தாரா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.