ஒரு வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கலிஃபோர்னியாவை உலுக்கிய கொடூரம் -நடந்தது என்ன?
கலிஃபோர்னியாவில் குடும்ப தகராறு காரணமாக 1 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலிஃபோர்னியா
கலிஃபோர்னியாவில் சேக்ரமெண்டோ கவுண்டி நகரில் ஆண்ட்ரி டெம்ஸ்கி என்பவர் தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில் இன்று அதிகாலை 4:15 மணியளவில் ஆண்ட்ரி டெம்ஸ்கி தனது மனைவியையும், மாமியாரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதன் பிறகு மனைவியை வெளியே தள்ளிவிட்டு தனது 1 வயது மகனுடன் வீட்டின் கதவைப் பூட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆண்ட்ரி டெம்ஸ்கி மனைவி கலிஃபோர்னியா காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்குக் காவல் அதிகாரிகள் சென்று பார்த்தபோது இளம் பெண்ணும் அவரது தாயார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனடியாக அவரை மீட்டு சம்பவ இடத்திற்கு சென்ற சிகிச்சைக்காக மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
1 வயது மகன்
இதனையடுத்து, ஆண்ட்ரி டெம்ஸ்கியை வீட்டின் கதவைத் திறக்குமாறு ஆண்ட்ரியை காவல் அதிகாரிகள் வற்புறுத்தினர். ஆனால், அவர் கதவைத் திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாகக் காவல் அதிகாரிகள் வீட்டினுள்ளே நுழைந்தனர்.
அப்போது குழந்தை படுக்கையறைக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தை படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆண்ட்ரி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தனர்.