திருமணமாகி ஒரே வாரம்தான் ஆச்சி.. நண்பருடன் சுற்றுலா சென்ற கணவர்-மனைவி எடுத்த வீபரித முடிவு!

Karnataka Marriage Crime Death
By Vidhya Senthil Dec 23, 2024 02:00 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே வாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தநவீன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Suicide by hanging within a week of marriage

புதுமணப்பெண் ஐஸ்வர்யாவிற்கு கணவர் நவீனின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளது.இது குறித்து விசாரித்த போது நவீன், மனைவியிடம் கூறாமல் தனியாக தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அடிக்கடி அவருடன் தகராற்றில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அடிக்கடி போன் பேசிய மனைவி..உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர் - டிராவல் பேக்கில் எடுத்து சென்ற கொடூரம்!

அடிக்கடி போன் பேசிய மனைவி..உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர் - டிராவல் பேக்கில் எடுத்து சென்ற கொடூரம்!

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஐஸ்வர்யா, படுக்கை அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே வாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

முதற்கட்ட விசாரணையில் நவீன் தர்மஸ்தலாவுக்கு பெண் ஒருவருடன் சென்றதாகக் கருதி மனமுடைந்து ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.