மொபைல் ஃபோனை இந்த மாதிரியூஸ் பண்றீங்களா? உங்கள் குணங்களை சொல்ல முடியும் -இதை பாருங்க!
மொபைல் ஃபோனை பிடிக்கும் விதத்தை வைத்தே உங்கள் குணங்களைச் சொல்ல முடியும் .இது குறித்து சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மொபைல் ஃபோனை
உங்கள் மொபைலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையின் ஆள்காட்டி விரலால் ஸ்க்ரோல் செய்தால் நீங்கள் புதுமையானவர்கள் என்று அர்த்தம். உறவுகளிடம் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். இவர்களிடம் நம்பக தன்மை அதிகமாக இருக்கும்.
உங்கள் மொபைலை இரண்டு கைகளால் பிடித்திருந்தால், நீங்கள் திறமையானவர் என்று அர்த்தம். அவசரமான சூழலையும் சிறப்பாகக் கையாள்வீர்கள். மேலும் உறுதியுடன் சவால்களைச் சந்திப்பீர்கள்.
சுவாரஸ்ய தகவல்
ஒரு கையில் ஃபோனை பிடித்திருந்தாலும், இன்னொரு கையால் ஸ்க்ரோலிங் செய்தால் உள்ளுணர்வு உள்ளவர் என்பதைக் குறிக்கிறது.அதாவது,காதல் மீதான அணுகுமுறை நெருக்கமாக இருக்கும்.
நீங்கள் ஒரு கையால் மொபைலைப் பிடித்துக் கொண்டு இருந்தால், அதே கையின் கட்டை விரலால் போனை ஸ்க்ரோல் செய்தால் தன்னம்பிக்கையுடன் இருக்கக் கூடிய நபர். சிந்தனை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். இதனால் உங்களது செயல்கள் அனைத்தும் வெற்றிக்கு வழிவகுக்கும்.