பயிற்சி மையத்தில் சேராமலேயே 22 வயதில் சாதனை - யார் இந்த அனன்யா IAS?

Uttar Pradesh India
By Jiyath Mar 27, 2024 06:09 AM GMT
Report

அனன்யா சிங் என்ற இளம் பெண் எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் சுயமாக படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 

அனன்யா சிங்

நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக ஐஏஎஸ் கருதப்படுகிறது. இதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் வென்றவர்கள் பெரும்பாலானோர் பயிற்சி மையங்களில் தயார் ஆனவர்களே.

பயிற்சி மையத்தில் சேராமலேயே 22 வயதில் சாதனை - யார் இந்த அனன்யா IAS? | Youngest Woman Ias Officer Ananya Singh

ஏனெனில் சவால் நிறைந்த இந்த தேர்வில் 3,4 முறை தேர்வெழுதினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர் அனன்யா சிங் (22). இவர் தனது பள்ளிப்படிப்பை சிஐஎஸ்சிஇ வழிக்கல்வி மூலம் பயின்று 10-ம் வகுப்பில் 96%,

1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!

1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!

இளம் அதிகாரி

12-ம் வகுப்பில் 98.25% வென்று பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர். இதனையடுத்து டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளியல் (Economics Honors) பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.

பயிற்சி மையத்தில் சேராமலேயே 22 வயதில் சாதனை - யார் இந்த அனன்யா IAS? | Youngest Woman Ias Officer Ananya Singh

மேலும், சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்ட அனன்யா சிங், 2019-ம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வெழுத சுயமாக தயாரானார். அதே ஆண்டிலேயே நாட்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாகவும் தேர்வாகி சாதனை புரிந்தார். தற்போது மேற்குவங்கத்தில் பதவி வகித்து வருகிறார்.