1400 கி.மீ-ல் வெறும் 6 நிறுத்தங்கள்.. 450 கி.மீ பிறகுதான் முதல் நிறுத்தம் - மின்னல் ரயில்!
இந்தியாவின் அதிவேகமாக பயணிக்கும் அதிவிரைவு ரயிலான தேஜஸ் ராஜ்தானி குறித்த தகவல்.
தேஜஸ் ராஜ்தானி
இந்தியாவின் அதிவேகமாக பயணிக்கும் அதிவிரைவு ரயிலாக தேஜஸ் ராஜ்தானி உள்ளது. புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மணிக்கு சுமார் 140 கி.மீ வரை பயணித்து மும்பை சென்றடைகிறது.
சிறந்த கேட்டரிங் வசதி கொண்ட இந்த ரயிலில் சைவம், அசைவம் என 2 வகையான உணவுகளும் வழங்கப்படுகிறது. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவிற்கும் முன்பதிவு செய்ய வேண்டும்.
6 நிறுத்தங்கள்
சுமார் 1,400 கி.மீ தூரம் வரை பயணிக்கும் இந்த ரயில் வெறும் 6 இடங்களில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 465 கிலோ மீட்டர் தான் முதல் நிறுத்தம்.
அதற்கு பிறகு வெறும் 5 நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிறுத்தப்படுகிறது. மேலும், இந்த தேஜஸ் ராஜ்தானி ரயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 1,380 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது.