நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு!

Tamil nadu Viluppuram
By Jiyath Oct 19, 2023 02:49 AM GMT
Report

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஸ்ருதன் ஜெய் நாராயணன்

கடந்த 2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றவர் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் ஆவார்.

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு! | Chinni Jayanth Son Additional Collector Villupuram

ஸ்ருதன் ஜெய் நாராயணன் தேர்ச்சி பெற்ற பின் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார்.

இஸ்ரேல்: போர் என்பதே கொடூரமானது! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இஸ்ரேல்: போர் என்பதே கொடூரமானது! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு

இதனையடுத்து திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு! | Chinni Jayanth Son Additional Collector Villupuram

இதற்காக திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.