செஞ்சி கோட்டை விழுப்புரத்தில் பிறந்து வானளவு புகழ் கொண்ட மனிதர்களை குறித்து தெரியுமா..?
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த பிரபலங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கட்சி நிறுவனருமான ராமதாஸ் விழுப்புரம் மாவட்டத்தின் கீழ்சிவிரியில் பிறந்தார். மருத்துவம் பயின்று மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் அளித்து புகழ்பெற்ற இவர், கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாகி மாற்றினார்.
1991-ஆம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலில் போட்டியிட்டு வரும் பாமகவின் முக்கிய ஈர்ப்பு சக்தியாக தற்போதும் தமிழக அரசியலிலும் முக்கிய சக்தியாக பார்க்கப்படுகிறார். இவரின் மகனான அன்புமணி ராம்தாஸ் தற்போது அக்கட்சியின் தலைவராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்து வருகின்றனர்.
செஞ்சி ராமசந்திரன்
தமிழகத்தின் முக்கிய மூத்த அரசியல்வாதிகளால் விழுப்புரம் மாவட்டத்தில் திகழ்ந்த செஞ்சி என்.ராமசந்திரன், விழுப்புரத்திலுள்ள செஞ்சியில் கடந்த 1944-ஆம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்துள்ள ராமசந்திரன், தமிழக சட்டப்பேரவைக்கு திமுகவின் சார்பாக 1977, 1980 மற்றும் 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு தேர்வாகினார்.
பின்னர் கட்சியில் இருந்து வெளியேறிய, வைகோவின் மதிமுகவில் இணைந்த செஞ்சி என்.ராமசந்திரன், வந்தவாசி தொகுதியில் இருந்து அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தேர்வாகினார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராமசந்திரன், அதிமுகவில் இணைந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி திரை இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் கடந்த 1977-ஆம் ஆண்டு பிறந்தார். கல்லூரியில் படிக்கும் போதே, சினிமா துறையில் ஆர்வமாக கொண்ட இவர், கல்லூரியில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார்.
பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னர் 2001-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி பாலிவுட்டில் ஹாலிடே போன்ற படங்களை இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று (25 செப்டம்பர்) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகண்டன்
எம். ஜி. ஆரின் ஆஸ்தான இயக்குனராக கருதப்பட்ட பழம்பெரும் இயக்குனர் நீலகண்டன் விழுப்புரம் மாவட்டத்தில் தான் பிறந்தார். சிறுவயது முதல் சினிமா மீது ஆர்வம் கொண்ட நீலகண்டன், கதை மற்றும் வசனகர்த்தாவாக 1947-ஆம் ஆண்டு வெளியான நாம் இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார்.
பின்னர், வாழ்க்கை படத்தின் மூலம் தன்னை இயக்குனராக உயர்த்திக்கொண்ட நீலகண்டன்,கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, சக்கரவர்த்தி திருமகள், அம்பிகாபதி, பூம்புகார், நீரும் நெருப்பும், ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் எம்.ஜி.ஆரை மட்டும் வைத்து 17 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாண்டில்யன்
வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான புதினங்களை எழுதி மிகவும் பிரபலம் பெற்றவர் பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானாக இருந்த இவர், பின்னர் எழுத்து துறையில் நாட்டம் கொண்டார்.
அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் மிக பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை மிக பெரிய வரவேற்புகளை பெற, ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிசோர்
தமிழ் திரையுலகில் மிகவும் சிறுவயதிலேயே மிக பெரிய எடிட்டர் ஆளுமையாக தன்னை நிரூபித்து காட்டிய கிசோர் 1978-ஆம் ஆண்டு வளவனூரில் பிறந்தார். தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்த இவர் பின்னர் 2009-ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகினார்.
தொடர்ந்து பல 70-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள கிசோர், 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் ஆடுகளம் மற்றும் விசாரணை படத்திற்காக தேசிய விருதைகளை இரண்டு முறை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ஆம் ஆண்டில் தனது 36 வயதில் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.