30 துண்டுகளாக ஃபிரிட்ஜில் கிடந்த இளம் பெண் உடல்..விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
டெல்லியில் நடந்த ஷர்த்தா கொலை நாட்டையே உலுக்கிய நிலையில் மிண்டும் அது போன்ற சம்பவம் பெங்களூரில் அரங்கேறி உள்ளது .
கர்நாடக மாநிலம்
கடந்த சில தினகளூக்கு முன் கர்நாடக மாநிலம் பெங்களுவை அடுத்த வயாலிகாவல் பகுதியில் ஒரு வீட்டில் அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குப் புகார் அளித்தனர். அப்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த வீட்டைச் சோதனை நடத்தினர்.
அப்போது பிரிஃஜில் பெண்ணின் உடல் 30க்கும் மேற்பட்ட துண்டுகளாகி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வ்சலைகலை ஏற்படுத்தியது .இது தொடர்பாகப் பெங்களூர் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் - மகாலட்சுமி தம்பதி என்பது தெரியவந்தது . இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்துள்ளனர் .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி பிரிந்து பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார் . இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வேலைக்குச் சென்றுவந்தார் மகாலட்சுமி.
திடுக் தகவல்
இவரைத் தினமும் ஒரு இளைஞர் வேலைக்கு அழைத்துச் சென்றுவந்துள்ளார். இந்த சுழலில் கடந்த 2-ம் தேதி முதல் மகாலட்சுமி திடீரென மாயமானார்.அவரது செல்போனுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் வரவில்லை எனவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மகாலட்சுமியின் வீட்டிலிருந்து கடந்த 2 நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் பிரிஃஜை திறந்து பார்த்தபோது மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மகாலட்சுமி கொலை 10 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.