உல்லாசத்தை தொடர்ந்து பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்ட நபர் - விசாரணையில் திடுக்..
துரைப்பாக்கத்தில் நடந்த பெண் கொலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெண் கொடூர கொலை
சென்னை, துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் போலீஸார் சூட்கேஸ் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில் பெண்ணின் சடலம் ஒன்று துண்டு துண்டாக இருந்துள்ளது.
அதேநேரத்தில் மகள் மாயமானதாக, பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவும், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் ட்ராலி சூட்கேஸை ரோட்டோரம் வீசிவிட்டு, அவசர அவசரமாக சென்றது பதிவாகியிருந்தது.
அதனைக் கொண்டு ஆராய்ந்ததில் பார்த்தசாரதி நகர் 4-வது தெருவில் உள்ள, ஒரு வீட்டில் குற்றவாளி பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்று பார்த்ததில் அந்த வீட்டு படிக்கட்டில் முழுக்க ரத்தக்கறை இருந்துள்ளது. பின் அங்கிருந்த மணிகண்டன் என்பவரிடம் விசாரித்ததில், பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
திடுக்கிடும் தகவல்
சம்பவத்தன்று திருவையாறுக்கு அக்கா, மாமா, குழந்தையை அழைத்து கொண்டு செல்லவும், வீட்டில் தனிமையில் இருந்தபோதுதான், பாலியல் தொழிலாளியை தேடியுள்ளார். தீபா மணிகண்டனின் வீட்டுக்கு சென்றுள்ளார். உல்லாசமாக இருந்த நிலையில், தீபாவிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து கிளம்புமாறு அவசரப்படுத்தியுள்ளார்.
வாடகை வீட்டில் வசித்து வருவதால் அக்கம் பக்கத்தில் யாரேனும் பார்த்து விட்டால் அக்காவிடம் சொல்லி விடுவார்கள் எனவும் மணிகண்டன் பயந்துள்ளார். இதனை உணர்ந்துக்கொண்ட தீபா 12 ஆயிரம் ரூபாய் வேண்டும். இல்லையென்றால் அக்கம் பக்கத்தினரை கூட்டி அசிங்கப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தீபாவை சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். கடைக்கு சென்று 3000 ரூபாய் மதிப்புள்ள சூட்கேஸ் வாங்கி அதில் உடலை வெட்டி வைத்து வீசியுள்ளார். இதற்கிடையில் மணிகண்டன் அவரது மூளையை வறுத்து சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.