ரத்தம் சொட்ட..சொட்ட.. வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன் - நெல்லையை உலுக்கிய கொடூர கொலை!

Tamil nadu Tirunelveli Murder
By Vidhya Senthil Sep 09, 2024 10:52 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 நெல்லையில் 3 வயது சிறுவன் கொலை செய்து வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டம் ஆத்துக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-ரம்யா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் (3வயது) அங்கன்வாடி மையத்தில் படித்து வந்துள்ளார். அந்த வகையில் இன்று காலை 9.30 மணியளவில்  வழக்கம் போல் அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல ரம்யா சிறுவனைத் தேடியுள்ளார்.


வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா அவரது தெரு முழுவதும் தேடிப்பார்த்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையத்துக்கும் சென்று தேடியுள்ளார்.

ஆனால் அங்கேயும் சிறுவன் இல்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினருடனும், உறவினர்களிடம் சிறுவனைக் காணாதது குறித்துக் கூறியுள்ளார்.

ஆபாச படத்திற்கு அடிமையான சிறுவன்..சிறுமியை காட்டிற்குள் வைத்து கொலை செய்த கொடூரம்!

ஆபாச படத்திற்கு அடிமையான சிறுவன்..சிறுமியை காட்டிற்குள் வைத்து கொலை செய்த கொடூரம்!

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் -ரம்யா இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எதிர்வீட்டு தங்கம்மாள் என்ற பெண் காவல்துறையைக் கண்டதும் பதற்றத்துடன் வெளியே ஓடினார்.

சிறுவன் கொலை 

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வாஷிங் மெஷினில் ரத்தக்கறையுடன் இருந்த சாக்குப்பையில் 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது தெரியவந்தது.


3 வயது சிறுவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகன் விபத்தில் உயிரிழந்த நிலையில் ஈம சடங்கிற்கு எதிர்வீடான விக்னேஷ் - ரம்யா தம்பதி வரவில்லையாம்.

இதனால் அவர் மீது முன்விரோதம் இந்தக் கொலை நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தனியாக இந்த கொலையை அரங்கேற்றினாரா? இதற்கு பின்னால் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.