துண்டு துண்டாக ஃபிரிட்ஜில் கிடந்த பெண் உடல்..பெங்களூருரில் பயங்கரம்-பின்னணி என்ன?

Bengaluru Crime Murder
By Vidhya Senthil Sep 22, 2024 09:24 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 பெங்களூருவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் 

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வயலிக்காவல் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிக துர்நாற்றம் வீதுவதாக, அப்பகுதி மக்கள் போலிஸுக்கு தகவல் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனர் .

murder

அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கிருந்த பிரிட்ஜில் துர்நாற்றம் வீசியது . பிரிட்ஜை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் உடல் - கொலையின் பின்னணி என்ன?

துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் உடல் - கொலையின் பின்னணி என்ன?

இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்த தகவலறிந்த கூடுதல் காவல் ஆணையர் சதீஷ்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

பயங்கரம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,''வீட்டின் முதல் மாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் சுமார் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம்.மேலும்,கொலை செய்யப்பட்ட பெண்,பெங்களூரில் குடியேறியுள்ள வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்.

bengaluru

மேலும் விசாரணைக்கு பின்பு, இது குறித்த முழு விபரம் தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் அஃப்தாப் அமீன் என்பவர் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி,பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தினார்.

இந்தக் கொலை பல மாதங்களுக்குப் பிறகுதான் வெளியுலகத்துக்குத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.