சூட்கேஸை தின்ற பெண்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
இளம்பெண் ஒருவர் சூட்கேஸை கடித்து தின்னும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம்
வித்தியாசமான வீடியோக்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகி ஆகிவிடும். அதேபோல் இதயத்தைத் கொள்ளைகொள்ளும் வீடியோக்களும் அல்லது அதிர்ச்சியூட்டும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி பேசுப்பொருளாக மாறும்
அந்த வகையில் இளம்பெண் ஒருவர் சூட்கேஸை கடித்து தின்னும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருக்கிறார்கள் . அப்போது ஒரு இளம்பெண் ஒருவர் கையில் வெள்ளை கலர் சூட்கேஸூடன் உள்ளே வந்து நாற்காலியில் அமர்கிறார்.
வைரல் வீடியோ
திடீரென கையில் வைத்திருந்த சூட்கேஸை கடித்துக் சாப்பிட துவங்கிவிட்டார். இதனைக் கண்ட அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் இளம் பெண் தொடர்ந்து சூட்கேஸை சாப்பிடவே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.
கடைசியில் சூட்கேஸை முழுக்க சாப்பிட்டபிறகுதான் அது கேக் என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்த பயணிகளுக்கு நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த வீடியோதான் இன்ஸ்டாகிராமில் இணையத்தில் பரவி வருகிறது.