டெல்லி ஷ்ரத்தா மாடல் கொலை..சூட்கேஸில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு - பதறும் மக்கள்!
சேலம் அருகே சூட்கேஸில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சேலம்
கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில் மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணைக் காதலன் 35 துண்டு தூண்டுகளாக வெட்டி கொலை செய்து உடலை ஃப்ரிஜில் வைத்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வாடா மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் இது போன்ற கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அண்மையில் சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டார். இதன் தாக்கம் சற்று ஓயாத நிலையில் தற்போது சேலம் அருகே இது போன்ற சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் பாலத்திற்கு அடியில் நேற்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அழுகிய சடலம்
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயால் மற்றும் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில், நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.