சென்னை சென்ட்ரலில் இளம் பெண் சடலம்; பதறிய மக்கள் - கொலையா? தற்கொலையா?

Chennai Death
By Swetha Apr 23, 2024 05:23 AM GMT
Report

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலமாக மீட்க பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் சடலம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இது நாட்டின் மிக முக்கியமான ரயில் மையங்களில் ஒன்றாகும். இங்கே தினமும் பல லட்சம் பேர் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இரவு ரயில் மற்றும் அதிகாலை ரயில் இருப்பவர்கள் இங்கே இரவில் படுத்து தூங்குவதும் வழக்கம்.

சென்னை சென்ட்ரலில் இளம் பெண் சடலம்; பதறிய மக்கள் - கொலையா? தற்கொலையா? | Woman Found Dead In Chennai Central

இதற்காக இங்கே ஓய்வு அறைகள் கூட உள்ளன. இந்நிலையில், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கில் பெண் ஒருவர் அமர்ந்தவாறு தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார். அந்த இளம்பெண் உடலை அங்கிருந்த பயணிகள் பார்த்து அலறி உள்ளனர்.

வர்த்தகத்தில் நஷ்டம்; கர்ப்பிணி மனைவியோடு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

வர்த்தகத்தில் நஷ்டம்; கர்ப்பிணி மனைவியோடு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

பதறிய மக்கள்

இதனை பார்த்த பெண்கள் பலர் பயத்துடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை சென்ட்ரலில் இளம் பெண் சடலம்; பதறிய மக்கள் - கொலையா? தற்கொலையா? | Woman Found Dead In Chennai Central

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகினறனர். இந்த பெண் யார்? எந்த ஊர்? என்ற எந்த விவரங்களும் அறியப்படவில்லை. மேலும் அவரது இறப்பிற்கு காரணம் என்ன இது கொலையா இல்லை தற்கொலையா ? என்று ரயில் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகினறனர்.