வர்த்தகத்தில் நஷ்டம்; கர்ப்பிணி மனைவியோடு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
கடன் தொல்லை காரணமாக கர்ப்பிணி மனைவியுடன் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகத்தில் நஷ்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவருக்கு சந்தியா (23) என்ற பெண்ணுடன் ஒராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.அவரது மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த தம்பதி ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.அவர்களோடு சந்தியாவின் தாயார் அவரை பார்த்துக்கொள்ள வசித்த வருகிறார். இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம், பங்கு சந்தை வர்த்தகத்தில் அதில் அதிக பணம் முதலீடு செய்துள்ளார்.
விபரீத முடிவு
அதிக அளவில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்கு சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் தொல்லை அதிகமாகி அதை திருப்பி தரமுடியாமல் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில், இரவு சந்தியா மற்றும் விஜயகுமார் இருவரும் அறைக்குள் தூங்க சென்றனர். காலை விடுந்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாயார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலை செய்யும் முன் விஜயகுமார் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், கடன் தொல்லைக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்துவிட்டேன் என்று எழுதியுள்ளார்.